உயர் பாதுகாப்புடன் ட்ரம்பிற்கு எதிரான போராட்டம்!!
ட்ரம்ப் என்றடில் போர் «Trump c'est la guerre» என்ற கோசத்துடன் இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான போராட்டம் ஒன்று இன்று நடந்துள்ளது.
இன்று முதலாம் உலகப் போரின், நூற்றாண்டு நிகழ்விற்கு பிரான்ஸ் வந்திருக்கும் டொனால்ட ட்ரம்பிற்கு எதிராக, நடாத்தப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு உச்சப்பாதுகாப்பு வழங்கப்பட்டதுடன், பெரும் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டது.
place de la République இல் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளதாக, உள்துறை அமைச்சர் கிறிஸ்தொப் கஸ்தானே (Christophe Castaner) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.