தொடரிலிருந்து வெளியேறுகிறது ஆப்கானிஸ்தான்! பதிலடி கொடுத்த பங்களாதேஷ்

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரிலிருந்து வெளியேறுகிறது ஆப்கானிஸ்தான்! பதிலடி கொடுத்த பங்களாதேஷ்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சுப்பர் 4 சுற்றின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றியீட்டி ஆப்கானிஸ்தான் அணியை தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.
 
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் மொஷ்ரஃப் மோர்டாசா முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். அதன்படி பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டத்தை பெற்றுக்கொண்டது.
 
பங்களாதேஷ் சார்பில் இம்ருல் கைஸ் 72 ஓட்டத்தையும், மாமதுல்ல 74 ஓட்டத்தையும் லிட்டன் தாஸ் 41 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக்கொண்டனர்.
 
250 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிங்கிய ஆப்கானிஸ்தான் சார்பில் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக மொஹமட் ஷாஜாத் மற்றும் இஷ்சனுல்லா ஜனாத் ஆகியோர் களமிறங்கி ஆடிவர ஆப்கானிஸ்தான் அணி 4.1 ஓவரில் 20 ஓட்டங்களை பெற்றிருந்தபோது தனது முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. அதன்படி ஜனாத் 8 ஓட்டத்துடன் ரஹ்மானின் பந்து வீச்சில் ஹசேனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
 
இவரையடுத்து களம்புகுந்த ரஹ்மத் ஷாவும் ஒரு ஓட்டத்துடன் ரன்அவுட் முறையில் ஆட்டமிழக்க அடுத்து ஆடுகளும் நுழைந்த ஹஷ்மத்துல்லா ஷஹதியுடன் ஷாஜாத் ஜோடி சேர்ந்தாட அணியின்  ஒட்ட எண்ணிக்கை சீரானது.
 
எனினும் 24.4 ஆவது ஓவரில் ஷாஜாத் மாமதுல்லாவின் பந்து வீச்சில் 53 ஓட்டத்துடன் போல்ட்முறையில் ஆட்டமிந்து வெளியேற அணித தலைவர் அஸ்கர் ஆப்கன் களமிங்கி ஷஹாதியுடன் ஜோடி சேர்ந்து 39 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மோர்டாசாவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
 
அதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 169 ஒட்டங்களை பெற்றிருந்தது. இதனையடுத்து 43.3 ஆவது ஓவரில் ஷஹாதி 71 ஓட்டங்களுடன் மோர்டாசாவின் பந்து வீச்சில் போல்ட் முறையில் தொடரிலிருந்து வெளியேறுகிறது ஆப்கானிஸ்தான்! பங்களாதேஷ் அணி பதிலடி கொடுத்தது
 
ஆட்டமிந்து வெளியேற மொஹமட் நபியும், சாமிமுல்லா ஷேவாரியும் ஜோடி சேர்ந்தாடி வந்தனர்.
 
இந் நிலையில் 45.1 ஆவது ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 200 ஆக அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து 47 ஆவது ஓவரல் ஆப்கானிஸ்தான் அணி 219 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள வெற்றிக்கு 18 பந்துகளில் 31 ஓட்டங்கள் தேவை என்றிருந்தது.
 
ஆடுகளத்தில் நபி 25 ஓட்டத்துடனும் ஷேவாரி 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதையடுத்து 48.2 பந்தில் நபி ஒரு 6 ஓட்டத்தை விளாச ஆட்டம் சூடு பிடித்தது. எனினும் நபி அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
 
இறுதி ஓவரில் வெற்றிக்காக 8 ஓட்டங்கள் தேவைப்பட ஆப்கானிஸ்தான் அணியால் 4 ஓட்டத்தை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.
 
அதன்படி ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களுக்கு 7 விக்கெட்டினை இழந்து 246 ஓட்டத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இதன்மூலம் பங்களாதேஷ் அணி மூன்று ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.
 
பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மோர்டாசா, ரஹ்மான் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், சஹிப் அல்ஹசன், மாமதுல்லா தலா ஒரு விக்கெட்டினையும்  வீழ்த்தினர்.
 
நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி தோல்வியை தழுவியமையினால் அடுத்த சுற்றுக்கு நுழைவதற்கான வாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை