ஆசிய கோப்பை கிரிக்கெட்....... இந்தியாவிற்கு சாதகமாக அமைந்த சூப்பர் 4 சுற்று அட்டவணை

தினகரன்  தினகரன்
ஆசிய கோப்பை கிரிக்கெட்....... இந்தியாவிற்கு சாதகமாக அமைந்த சூப்பர் 4 சுற்று அட்டவணை

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை சூப்பர் 4 சுற்று ஆட்டங்கள் தொடங்க உள்ளன. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையை பொறுத்தவரை இந்தியாவுக்கு சற்று சாதகமாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்த சுற்றில் இந்தியா விளையாட உள்ள 3 போட்டிகளும் துபாயில் நடைபெற உள்ளன. இது இந்தியாவிற்கு சாதகமாக கருதப்படுகிறது. ஏனெனில் மற்ற அணிகளுக்கு துபாய், அபுதாபி என இருவேறு நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே இத்தொடரின் லீக் போட்டியில் இந்தியாவிற்கு அடுத்தடுத்த நாட்களில் போட்டிகள் வைத்தது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. அதில் குரூப் பிரிவு போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. லீக் போட்டியில் இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடம் பிடித்த அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.சூப்பர் 4 சுற்று அட்டவணை செப்.21- இந்தியா - வங்கதேசம் (துபாய்)செப்.21- பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் (அபுதாபி)செப்.23- இந்தியா- பாகிஸ்தான் (துபாய்)செப்.23- ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் (அபுதாபி)செப்.25- இந்தியா - ஆப்கானிஸ்தான் (துபாய்)செப்.26- பாகிஸ்தான் - வங்கதேசம் (அபுதாபி)இந்தப் போட்டிகளின் முடிவில் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். செப்டம்பர் 28-ம் தேதி துபாயில் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றன.

மூலக்கதை