24 போட்டிகளில் 50 விக்கெட்: குல்தீப் யாதவ் சாதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
24 போட்டிகளில் 50 விக்கெட்: குல்தீப் யாதவ் சாதனை

துபாய்: ஹாங்காங் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம்  குறைந்த போட்டிகளில் 50 ஒருநாள் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

மேலும் இந்த பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். வெறும் 24 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவர். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹாங்காங்கிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது.

 அடுத்து ஆடிய ஹாங்காங் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்து வீழ்ந்தது. அஜந்தா மெண்டிஸ்  19 போட்டிகளிலும் , அஜித் அகர்கர், மிட்செல் மெக்லங்கன்  23 போட்டிகளிலும் , டெனிஸ் லில்லி, குல்தீப் யாதவ், ஹசன் அலி  24 போட்டிகளிலும்  50 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளனர்.

நேற்றைய ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்தி தற்போது இந்தப் பட்டியலில் குல்தீப் யாதவும் இணைந்துள்ளார்.

.

மூலக்கதை