துரி­யன் பழம் கிலோ ரூ.1,100

தினமலர்  தினமலர்
துரி­யன் பழம் கிலோ ரூ.1,100

தேனி:தேனி பழக் கடை­களில், துரி­யன் பழத்­தின் விலை கிலோ, 1,100 ரூபா­யாக உள்­ளது.
துரி­யன் பழம் நீல­கி­ரி­யில் அதி­க­மாக விளை­விக்­கப்­ப­டு­கிறது. பழத்தை உடைக்­கா­மல் ஒரு மாதம் வரை வைத்­தி­ருந்­தா­லும் அழு­கா­மல் இருக்­கும். உடைத்­தால் சில மணி நேரத்­தில்
தின்­று­விட வேண்­டும்.


தேனி பழக்கடை உரி­மை­யா­ளர், தங்­கேஸ்­வ­ரன் கூறி­ய­தா­வது:


வைட்­ட­மின், ‘சி’ நிறைந்த துரி­யன் பழம், தைராய்டு, குறைந்த ரத்த அழுத்­தம், ரத்த சோகை உள்­ளிட்ட நோயா­ளி­க­ளுக்கு உகந்­த­தாக இருக்­கிறது. இத­னால், பல­ரும் விரும்பி வாங்கி செல்­கின்­ற­னர். முன்பு, சீச­னில் மட்­டுமே இப்­ப­ழம் கிடைத்­தது. தற்­போது, ஆண்டு முழு­வ­தும் கிடைக்­கிறது; வரத்­தும் ஒரே சீராக உள்­ளது. விலை ஓராண்­டாக கிலோ, 1,000 – 1,100 ரூபா­யாக உள்­ளது. வரத்து குறைந்­தால், 2,000 ரூபாய் வரைக்­கும் உய­ரும்.இவ்­வாறு, அவர் கூறி­னார்.


மூலக்கதை