கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து! - விரைவில் சேவை!!

PARIS TAMIL  PARIS TAMIL
கார்துலியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து!  விரைவில் சேவை!!

Montparnasse மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலையத்தில் இருந்தும் OuiGo சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 
 
கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo சேவை தெற்கு பிரான்ஸ் நோக்கி பயணப்பட உள்ள்து. Nice, Cannes, Toulon, Antibes, Saint Raphael மற்றும் Draguignan ஆகிய நகரங்களுக்கு பயணிக்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், OuiGo சேவைகள், மொம்பர்னாஸ் மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து  ஆரம்பிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் இந்த குறைந்த கட்டண தொடரூந்து சேவையானது வரும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் இருந்து கார்-து-லியோனில் இருந்து தெற்கு பிராந்தியம் நோக்கி பயணிக்க உள்ளது. 
 
கட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. பெரியவர்களுக்கு €19 களும், சிறுவர்களுக்கு €8களும் அறவிடப்படும். 2013 ஆம் ஆண்டு, OuiGo இரண்டு மில்லியன் பயணிகளைச் சந்தித்திருந்தது. அதே OuiGo, 2017 ஆம் ஆண்டில் 13 மில்லியன் பயணிகளை சந்தித்திருந்தது என SNCF அறிவித்துள்ளது.

மூலக்கதை