38வது லீக் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து: அரையிறுதிக்குள் நுழையும் 4வது அணியில் இழுபறி

தமிழ் முரசு  தமிழ் முரசு
38வது லீக் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்தது இங்கிலாந்து: அரையிறுதிக்குள் நுழையும் 4வது அணியில் இழுபறி

பர்மிங்காம்: உலக கோப்பை தொடரின் 38வது லீக் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் ேநற்று மோதின. முன்னதாக 11 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கும் நிலையில், 4வது இடத்திற்கு இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் போராடி வருகின்றன.

பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் 9 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும், இங்கிலாந்து 7 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் இருந்தன. நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் நீடிக்கும். இங்கிலாந்து 5ம் இடத்திலேயே இருக்கும்.

அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை எதிர்நோக்கி, இந்திய அணிக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் சப்போர்ட் செய்தனர். ஆனால், நேற்று நடந்ததோ வேறு.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் காத்திருந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பாரிஸ்டோவ் 111 ரன்களும், ராய் 66 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும், ஜோ ரூட் 44 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி 337 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ராஹ் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு கே. எல் ராகுல் ரன் எதுவுமே எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து விராட் கோஹ்லி - ரோஹித் சர்மா கூட்டணி நிதானமாக ரன் சேர்த்தாலும் முதல் 18 ஓவர்கள் வரை சொற்ப ரன்களே எடுத்தனர்.

பின்னர் 76 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்த போது விராட் கோஹ்லியும், 109 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த போது ரோஹித் சர்மாவும் விக்கெட்டை இழந்து வெளியேறினார். இதன்பின் களம் இறங்கிய ரிஷப் பண்ட் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 45 ரன்களும், கடைசி வரை ஆட்டமிழக்காத தோனி 31 பந்துகளில் 1 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்தனர்.



அவரவர் பங்களிப்பை சரியாக செய்து கொடுத்தாலும் இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 31 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியடைந்துள்ள இந்திய அணி, நடப்பு தொடரில் முதல் தோல்வியையும் சந்தித்துள்ளது.

ஆட்டநாயகனாக பாரிஸ்டோ அறிவிக்கப்பட்டார். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி 5-69 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பும்ரா 1-44, குல்தீப் 1-72 விக்கெட்டை சாய்த்தனர். ஆனால் சுழற்பந்து வீச்சாளரான சஹல் 10 ஓவர்களில் 88 ரன்களையும், குல்தீப் 10 ஓவர்களில் 72/1 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். ஆல்ரவுணட்ர் ஹார்திக் பாண்டியாவும் 10 ஓவர்களில் 60 ரன்களை விட்டுத் தந்தார்.

இந்த உலகக் கோப்பையில் தொடர்ந்து 5வது அரைசதத்தை கோலி பதிவு செய்தார். மேலும் ரோஹித் சர்மா இந்த உலகக் கோப்பையில் தனது 3வது அரைசதத்தையும் பதிவு செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் தனது அரையிறுதி வாய்ப்பை இங்கிலாந்து தக்க வைத்துள்ளது.

அடுத்து வங்கதேசம் (நாளை), இலங்கையுடன் (6ம் தேதி) இந்தியா ஆட வேண்டும். இதில், ஒரு ஆட்டத்தில் வென்றாலே அரையிறுதிக்கு இந்தியா தகுதிபெறும்.
இந்த போட்டித்தொடரில் தோல்வியே சந்திக்காமல் வந்த இந்தியஅணி முதல் தோல்வி அடைந்தது.

27 ஆண்டுகளுக்குப் பின் (1992) இந்திய அணியை உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியை இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4வது இடத்துக்கு முன்னேறி அரையிறுதிக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆனாலும், நியூசிலாந்துடனான போட்டியில் (3ம் தேதி) வென்றாக வேண்டிய கட்டாயம் இங்கிலாந்துக்கு இருக்கிறது.

அதேபோல பாகிஸ்தான் அணியும் 4 வெற்றி, 9 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நல்ல ரன்ரேட்டில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த அணி புள்ளி பட்டியலில் இன்றைய நிலையில் 5வது இடத்தில் 8 போட்டிகளில் 4ல் வெற்றி, 3ல் தோல்வி என 9 புள்ளிகளுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணி வங்கதேசத்துடன் 5ம் தேதி நடக்கும் போட்டியில் வெற்றிப் பெற்று, நியூசிலாந்துடன் இங்கிலாந்து தோற்கும்பட்சத்தில் ‘ரன்ரேட்’ அடிப்படையில் அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றியும், தோல்வியும். . .
வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் கூறுைகயில், ‘‘போட்டியின் துவக்கத்தில் இருந்தே நாங்கள் சிறப்பாக விளையாடியதாக நினைக்கிறேன்.

பேட்டிங்கில் துவக்கத்திலேயே அதிக ரன்களை குவித்துவிட்டது எங்களுக்கு சாதமாக அமைந்துவிட்டது. குறிப்பாக பாரிஸ்டோவ், பெண் ஸ்டோக்ஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டமே போட்டியில் எங்களுக்கு வெற்றியை பெற்று கொடுத்துள்ளது’’ என்றார்.

தோல்வி குறித்து இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறுைகயில், ‘‘போட்டி என்று வந்துவிட்டால் வெற்றி தோல்வி இருக்க தான் செய்யும். தோல்வி ஏற்படும் பொழுது எதிரணியின் பலத்தையும், அவர்களின் சிறப்பான செயல்பாடுகளையும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

பந்துவீச்சில் அதிகப்படியான ரன்களை வாரி வழங்கிவிட்டோம். ஆடுகளும் எங்களுக்கு சாதகமானதாக இல்லை.

இயன்றவரை போராடி சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம்.

இருந்தாலும் எங்களை விட இங்கிலாந்து அணியே இந்த வெற்றிக்கு தகுதியானது’’ என்றார்.

.

மூலக்கதை