மான்டெரி ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மான்டெரி ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் வீராங்கனை முகுருசா வெற்றி

மான்டெரி: மெக்சிகோவில் நடந்த மான்டெரி ஓபன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப்போட்டியில் வென்று ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருசா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இறுதிப்போட்டியில் கார்பின் முகுருசாவும், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரெங்காவும் மோதினர்.

இதில் முதல் செட்டை 6-1 என எளிதாக முகுருசா கைப்பற்றினார். 2ம் செட்டிலும் 3-1 முகுருசா முன்னிலையில் இருந்தார்.

அப்போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அஸரெங்கா அறிவித்தார். இதையடுத்து முகுருசா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி குறித்து முகுருசா கூறுகையில், ‘‘அவர் பாதியில் விலகி இருக்காவிட்டாலும் நான்தான் வெற்றி பெற்றிருப்பேன்.

கடந்த 2018ல் இந்த பட்டத்தை நான் வென்ற பிறகு, சொல்லிக் கொள்ளும்படியாக ஒற்றையர் போட்டிகளில் சாதிக்கவில்லை. அதனால் இந்த வெற்றி எனக்கு மிகவும் திருப்தியளிக்கிறது. இன்று எனக்கு சிறப்பான நாள்.

நான் நன்றாக விளையாடினேன் என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

நான் அப்படி நினைக்கவில்லை. இந்த வாரம் முழுவதும் எனக்கு சிறப்பான வாரம்தான். ஒரு டோர்னமென்ட் என்பது இறுதிப்போட்டி ஒன்று மட்டுமல்ல.

மொத்தம் 5 போட்டிகளில் வரிசையாக வெற்றி பெற்று, இந்த பட்டத்தை வென்றுள்ளேன்’’ என்று தெரிவித்தார். அஸரெங்காவும், முகுருசாவும் இதற்கு முன்னர் ஒரே ஒரு போட்டியில் ஆடியுள்ளனர். அதில் முகுருசாவே வெற்றி பெற்றுள்ளார்.

மான்டெரி ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 19வது இடத்தை முகுருசா தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

.

மூலக்கதை