Brexit எங்களுக்கு ஒரு படிப்பினை! - ஜனாதிபதி மக்ரோன்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Brexit எங்களுக்கு ஒரு படிப்பினை!  ஜனாதிபதி மக்ரோன்!!

<<திடமான எந்த முடிவுகளும் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது எங்களுக்கான படிப்பினை>> என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார். 
நேற்று வெள்ளிக்கிழமை பெல்ஜியத்தின் Brussels நகரில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் இதனை அவர் குறிப்பிட்டார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்து நாம் அரசியல் படிப்பினை ஒன்றை கற்றுக்கொள்ளவேண்டும். பிரித்தானிய பாராளுமன்றம் (வாக்கெடுப்பில்)  அடுத்தவாரமும் Brexit இனை நிராகரிக்கவேண்டும்>> என குறிப்பிட்டார். 
 
அதேவேளை, Brexit இனை ஆதரிக்கும் பிரித்தானிய மக்களுக்கான எச்சரிக்கையாக, <<இதில் எந்த நன்மைகளும் இருப்பதாக தெரியவில்லை.  அவர்கள் உறுதியளிப்பது போல் எதுவும் நடக்காது. உண்மையை பின்னர் தான் உணர்ந்துகொள்வீர்கள்>> எனவும் கடுமையாக சாடியுள்ளார். தவிர, 'பிரித்தானிய மக்கள் எங்கள் நண்பர்கள். அவர்களுக்கு எந்த முகமூடியையும்  அணிந்து எங்களால் பார்க்கமுடியாது!>> எனவும் குறிப்பிட்டார்.

மூலக்கதை