ஆதியின் பாட்னர் ஹன்சிகா

தினமலர்  தினமலர்
ஆதியின் பாட்னர் ஹன்சிகா

100, மஹா படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, அடுத்தப்படியாக நடிகர் ஆதி உடன் இணைந்து நடிக்கிறார். இப்படத்திற்கு, பாட்னர் என பெயர் வைத்துள்ளனர். டோரா படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இயக்குகிறார்.

இவர்களுடன் குப்பத்து ராஜா படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்துள்ள, பல்லக் லால்வானியும் இன்னொரு கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். சந்தோஷ் தயாநிதி இசை. ஆர்எப்சிசி கிரியேசன்ஸ் சார்பில் கோலி தயாரிக்கிறார்.

"சயின்ஸ் பிக்சன் கலந்த பேண்டசி காமெடி படமாக இப்படம் உருவாகிறது. ஹன்சிகாவின் கதாபாத்திரம் படத்தில் முக்கியமானதாக இருக்கும், ஆதியின் சினிமா வாழ்விலும் முக்கியமான படமாக இருக்கும்" என்கிறார் இயக்குநர் மனோஜ். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று(மார்ச் 20) துவங்கியது.

மூலக்கதை