மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் வன்முறை! - உள்துறை அமைச்சரை அழைத்த செனட் மேற்சபை!

PARIS TAMIL  PARIS TAMIL
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் வன்முறை!  உள்துறை அமைச்சரை அழைத்த செனட் மேற்சபை!

சனிக்கிழமை பரிசில் மஞ்சள் மேலங்கி போராளிகளால் அரங்கேற்றப்பட்ட வன்முறை சம்பவங்களை அடுத்து, உள்துறை அமைச்சர் செனட் மேற்சபையினால் அழைக்கப்பட்டுள்ளார். 
 
சட்ட ஒழுங்கு சீர்கேடு குறித்து போதிய விளக்கத்தினை செனட் மேற்சபைக்கு உள்துறை அமைச்சர் அளிக்க உள்ளார். கடந்த சனிக்கிழமை 18 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் அளவு கடந்த வன்முறையினால் பரிஸ் மாநகரமே ஸ்தம்பித்திருந்தது. பல ஆயிரம் யூரோக்கள் நஷ்ட்டமும் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பான விளக்கத்தினை செனட் மேற்சபைக்கு அளிப்பதற்காக நாளை செவ்வாய்க்கிழமை அவர் அழைக்கப்பட்டுள்ளார். உள்துறை அமைச்சருடன், பொருளாதார அமைச்சர்  Bruno Le Maire ம் உடன் அழைக்கப்பட்டுள்ளார். 
 
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் கட்டுக்கடங்காத வன்முறையும், குறிப்பாக சோம்ப்ஸ்-எலிசேயில் கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை