கமல் படத்தில் தென்கொரியா நடிகை
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன் 2' என்ற பெயரில் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்திலும் நடிகர் கமலே கதாநாயகன். நடிகர்கள் சிம்பு, துல்கர் சல்மான், ஆகியோருடன் நடிகை காஜல் அகர்வாலும் நடிப்பார் என தெரிகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் தென் கொரிய நடிகையும் பாடகியுமான சூசி பே(suzy bae) நடிக்கவிருக்கிறார். வரும் 18ல் இருந்து 'இந்தியன் 2' படத்தின் படபிடிப்பு விறுவிறுவென துவங்கவிருக்கிறது.
இந்தப் படத்தின் பெரும்பான்மையான படபிடிப்பை தைவானில் நடத்த படக் குழு திட்டமிட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தை 2020ல் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.