பிரிமியர் பேட்மின்டன் லீக் அகமதாபாத் அணி அபார வெற்றி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரிமியர் பேட்மின்டன் லீக் அகமதாபாத் அணி அபார வெற்றி

ஐதராபாத்: பிரிமியர் லீக் பேட்மின்டன் போட்டியில், 4-1 என்ற கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி அகமதாபாத் அணி அபார வெற்றி பெற்றது. பிரிமியர் பேட்மின்டன் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஐதராபாத்தில் நடந்த லீக் போட்டியில் டெல்லி, அகமதாபாத் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. கலப்பு இரட்டையர் பிரிவில், டெல்லியின் மணிபோங், சியா ஹசின் ஜோடி, அகமதாபாத்தின் சாத்விக் சாய்ராஜ், சிக்கி ரெட்டி ஜோடியுடன் மோதியது.

15-11, 15-10 என்ற கணக்கில் அகமதாபாத் அணி வீரர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் போட்டியில் டெல்லி அணியின் பிரணாய், அகமதாபாத்தின் டேரன் லிவ் ஆகியோர் மோதினர்.

இதில் டெல்லியின் பிரணாய் தோல்வி அடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது ஆட்டத்தில் அகமதாபாத்தின் விக்டர், டெல்லி அணியின் டாமி சுகியர்டோ ஆகியோர் மோதினர்.

இதில், டாமி சுகியர்டோ வெற்றி பெற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஆமதாபாத்தின் கிறிஸ்டி 12-15, 15-12, 15-7 என்ற கணக்கில் டெல்லி அணியின் எவ்ஜெனியாவை வென்றார்.

ஆண்கள் இரட்டை பிரிவில், டெல்லி அணியின் சாய் பியாவோ, வாங் சிஜி ஜோடி, அகமதாபாத்தின் ரெஜினால்டு, சாத்விக் சாய்ராஜ் ஜோடியை வென்றது.

5 போட்டிகள் முடிவில், புள்ளிகள் அடிப்படையில், 4-1 கணக்கில் அகமதாபாத் அணி அபார வெற்றி பெற்றது.       

.

மூலக்கதை