18 மணிநேரங்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்திய பெண் ஒருவருக்கு 18 மாத சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
18 மணிநேரங்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்திய பெண் ஒருவருக்கு 18 மாத சிறை!!

பணியாளை நாள் ஒன்றுக்கு 18 மணிநேரங்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்திய பெண் ஒருவருக்கு பதினெட்டு மாதங்கள் சிறையும், 60,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்பட்டுள்ளது. 
 
Châtenay-Malabry (Hauts-de-Seine) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 54 வயதுடைய பெண்ணுக்கே இந்த தண்டனை நேற்று திங்கட்கிழமை விதிக்கப்பட்டுள்ளது. மாலி நாட்டினை பூர்வீகமாக கொண்ட இளம் பெண் ஒருவரை கடந்த ஐந்து வருடங்களாக நாள் ஒன்றுக்கு 18 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பணிபுரிய கட்டாயப்படுத்தியுள்ளார். 
 
குறித்த பெண் கடந்த 2000 ஆம் ஆண்டு தனது 13 வது வயதில் மாலியில் இருந்து பிரான்சுக்கு வந்துள்ளார். அவர் தெரிவிக்கும் போது, குறித்த வீட்டில் தாம் அடிமை போல் நடத்தப்பட்டதாகவும், சிறுவர்களுடன் சேர்த்து 13 பேர் குறித்த விட்டில் வசிப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் தேவையான அனைத்து வேலைகளையும் ஓய்வில்லாமல் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கான ஊதியம் அவர்கள் வழங்கவில்லை எனவும், அவ்வப்போது கை நீட்டி தன்னை அடித்துள்ளதாகவும் குறித்த பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 
 
குறித்த பெண்ணுக்கு நஷ்ட்டஈடாக 60,000 யூரோக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை