பஜாஜ்

தினமலர்  தினமலர்
பஜாஜ்

பல்­ஸர் பிளாக் பேக்பஜாஜ் நிறு­வன தயா­ரிப்­பு­களில் அதி­க­மாக விற்­ப­னை­யா­கும், ‘பல்­ஸர்’ வரிசை பைக்­கு­கள், உல­கின் பல்­வேறு நாடு­களில் நல்ல வர­வேற்பை பெற்­றுள்ளன. அவற்­றின் விற்­பனை, ஒரு கோடியை கடந்­துள்­ளது. அதை கொண்­டா­டும் வகை­யில், ‘பிளாக் பேக்’ எனும், சிறப்பு பதிப்பு பைக்­கு­களை, பஜாஜ் தயா­ரித்து சந்­தை­யில் கள­மி­றக்கி உள்­ளது. அது, 150, 180 மற்­றும், 220 எப் என, மூன்று ரகங்­களில் தயா­ரிக்­கப்­பட்டு உள்­ளது.இவற்­றில், புதிய அலாய் வீல், எரி­பொ­ருள் டேங்­கின் இரு புறங்­க­ளி­லும், டிகேல், கறுப்பு மற்­றும் சாம்­பல் நிற பூச்சு, ‘குரோம்’ புகை­போக்கி என, சில புதிய அம்­சங்­கள் உள்ளன. எனி­னும், தொழில்­நுட்ப அம்­சங்­களில், மாற்­றங்­கள் எது­வும் செய்­யப்­ப­ட­வில்லை. அது போல், விலை­யி­லும் மாற்­றம் இல்லை.150 ‘சிசி’ பைக்­கின் ஷோரூம் துவக்க விலை, டில்­லி­யில், 76,723 ரூபா­யில் இருந்து துவங்­கு­கிறது. இது போல், 180 ‘சிசி’ பைக்­கின் விலை, 81,651 ரூபாய் மற்­றும், 220 எப் பைக்­கின் துவக்க விலை, 93,683 ரூபாய் என, வழக்­க­மான விலை நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.

மூலக்கதை