இணைத்தளத்தில் பயங்கரவாதம் - பரிசில் இளைஞன் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
இணைத்தளத்தில் பயங்கரவாதம்  பரிசில் இளைஞன் கைது!!

பரிசில் இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டை அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளமான யூடியூப்பில் பயங்கரவாதம் மேற்கொண்ட காரணத்தினால் இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
பரிஸ் பயங்கரவாத தடைப்பிரிவினரால் கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி குறித்த 20 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டிருந்தான். ஒரு வாரம் இடம்பெற்ற தொடர்ச்சியான விசாரணைகளின் பின்னர் அவன் ஐந்துவருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக நேற்று திங்கட்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞன் அல்ஜீரிய குடியுரிமை கொண்டவன் எனவும்,  சமூக வலைத்தளமான யூடியூப்பில் பயங்ஜரவாதம் தொடர்பான பிரச்சாரங்களை தரவிறக்கி.. பின்னர் மீண்டும் இணையத்தில் பதிவேற்றியிருந்ததாகவும், பயங்கரவாதிகளுடன் டெலிகிராம் தொலைபேசி செயலியூடாக உரையாடியிருந்ததாகவும், தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, குறித்த இளைஞன் சிரியா செல்வதற்கு ஆர்வத்துடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே பரிஸ் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை