நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன்
இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அணிவகுப்புடன் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா மற்றும் அயல்நாடுகளைச்சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு அங்கு ஆகஸ்ட் 15-ந்தேதி நடக்கும் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்களுடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்சும் கலந்து கொள்கிறார்.