பாராட்டுகளை பெற்றுவரும் செனகல் மற்றும் ஜப்பான் கால்பந்து ரசிகர்களின் செயல்

தினகரன்  தினகரன்
பாராட்டுகளை பெற்றுவரும் செனகல் மற்றும் ஜப்பான் கால்பந்து ரசிகர்களின் செயல்

சோச்சி: செனகல் மற்றும் ஜப்பான் கால்பந்து ரசிகர்களின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.  உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் ஆப்பிரிக்கா அணியான செனகல் போலந்து அணியை எதிர்கொண்டது. இதில் செனகல் 2-1 என வெற்றி பெற்றது. இதேபோல் கொலம்பியா-ஜப்பான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ஜப்பான் வெற்றி பெற்றது. இந்த உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை செனகல் பெற்றது. இரு அணிகளும் போட்டியை வென்றது போல, செனகல் மற்றும் ஜப்பான் போட்டியை பார்க்க வந்திருந்த அந்த அணியின் ரசிகர்கள் மற்றும் ரசிகைகளின் செயல் அனைவரது உள்ளத்தையும் வென்றது. போட்டியின்போது ஆரவாரம் எழுப்பி வீரர்களை உற்சாகப்படுத்தினார்கள். தேநீர், குளிர்பானங்கள் குடிப்பதற்கு பயன்படுத்திய கோப்பைகள், அணிக்கு ஆதரவாக எழுதி வைத்திருந்த பதாதைகள் போன்றவை மைதானத்தின் கேலரியின் கீழ் சிதறிக்கிடந்தன. போட்டி முடிந்து ரசிகர்கள் சென்ற பின்னர், செனகல் ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் பலர், அந்த குப்பைகளை ஒன்றுவிடாமல் பொறுக்கி குப்பை தொட்டியில் கொண்டு சேர்த்தனர். இதேபோல் ஜப்பான் அணியின் ரசிகர்களும் செய்துள்ளனர். அவர்களது இந்த செயல்களை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மூலக்கதை