கொரிய பயிற்சியாளரின் வித்தியாசமான வியூகம்!
உலக கோப்பையில் களமிறங்கும் தென் கொரிய அணியின் பயிற்சியாளர் ஷின் டே- யாங். இவர் எதிரணி வீரர்களைக் குழப்புவதற்காக வித்தியாசமான வியூகத்தை கையாண்டுள்ளார். முக்கியமான வீரர்கள் தாங்கள் வழக்கமாக அணியும் எண் கொண்ட ஜெர்சிக்கு பதிலாக வேறு எண் கொண்ட சீருடையுடன் விளையாட வைத்துள்ளார் ஷின். அதாவது மெஸ்ஸி என்றால் 10ம் எண் டி ஷர்ட்டுடன் விளையாடுவார், கிறி ஸ்டியானோ ரொனால்டோ 7ம் எண் ஜெர்சி அணிவார் என்று எல்லோருக்கும் தெரியும். அது போல தென் கொரிய அணியின் முக்கிய வீரர்களும் குறிப்பிட்ட எண் கொண்ட சீருடைகளை பயன்படுத்தும்போது, எதிரணியினர் அவர்களை குறிவைத்து தற்காப்பு வியூகம் அமைப்பார்கள் என்பதால் எண்களை மாற்றி களமிறக்கி உள்ளார் ஷின். ரூம் போட்டு யோசித்த இந்த வியூகத்துக்கு எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.