கார்-து-நோர் நிலையத்தில் சந்தித்த எதிரி! - வீடு தேடி வந்து தாக்குதல்!!
நபர் ஒருவர் மிக மோசமான காயங்களுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, Bichat மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தாக்குதல்தாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை, Rue Claude-Monet (Saint-Ouen) உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையில், வீட்டுக்குள் இருவரும் நீண்ட நேரம் சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தனர். தக்குதல்தாரியை சம்பவத்துக்கு சிலமணி நேரம் முன்பாக கார்-து-நோர் நிலையத்தில் வைத்து சந்தித்துவிட்டு, வீட்டுக்கும் அழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வீட்டுக்கு வந்த குறித்த நபர், திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில், குறித்த நபரினை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். மார்பு மற்றும் கைகளில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், மேலதிக தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை. தப்பியோடிய தாக்குதல்தாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.