‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் இசையமைப்பாளர் இமான்
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பிற்கு இசையமைப்பாளர் இமான்-ஐ அழைத்துள்ளார் அஜித். இமானும் சென்னையிலிருந்து ஐதராபாத் சென்று படப்பிடிப்பைப் பார்த்து ரசித்துள்ளார். இது பற்றி இமான் கூறியிருப்பதாவது, “என்னுடைய பாடல்களின் படப்பிடிப்பைப் பார்ப்பது எப்போதாவது தான் நடக்கும். ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் என்னுடைய பாடல்களுக்கு எளிமையின் மனிதன் நடனமாடுவதைப் பார்த்து...