SNCF - இன்று இரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
SNCF  இன்று இரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பு!!

இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், SNCF தொழிலாளர்கள் மீண்டும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர். ஐந்தாம் கட்ட 48 மணிநேர பணி பகிஷ்கரிப்பு இதுவாகும்.
 
ஆனால், முன்னைய நாட்களை விட இம்முறை குறைந்த அளவிலான சேவைகளே தடைப்படும் என அறியமுடிகிறது. TGV களில் 35 வீதமானவையும், Intercités களில் 30 வீதமானவையும், RER சேவைகள் TER சேவைகளில் 40 வீதமானவையும் இயங்கும். தவிர, Transilien சேவைகளிலும் 40 வீதமானவை இயங்கும். 
 
வெளிநாடுகளுக்குச் செல்லும் சர்வதேச சேவைகளில் சொல்லிக்கொள்ளும் படியான தடை ஏற்படாது எனவும், ஒன்று அல்லது இரண்டு சேவைகள் தடைப்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 10 அளவில் ஆரம்பிக்கும் பணி பகிஷ்கரிப்பு, புதன்கிழமை காலை 7.55 மணிக்கு வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை