கோடைக்கால இலவச கைப்பந்து பயிற்சி

தினகரன்  தினகரன்

சென்னை: நெல்லை நண்பர்கள் வாலிபால் கிளப் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கோடைக்கால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது இறித்து நெல்லை நண்பர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு 36வது இலவச கோடைக்கால கைப்பந்து பயிற்சி முகாம் ஏப்.23ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த இலவச பயிற்சி முகாமில் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். ஆர்வமுள்ளவர்கள் ஏப்.23ம் தேதி காலை 6.30 மணிக்கு தொடங்கி தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பயிற்சியில் பங்கேற்கலாம். பயிற்சிகள் சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு வளாகத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் நடைபெறும்.

மூலக்கதை