ட்வீட் கார்னர் ...அமெரிக்காவில் நடத்தினாலும் என் தமிழினம் வாழ்த்த வரும்

தினகரன்  தினகரன்

சிஎஸ்கே அணியின் போட்டிகள் புனேக்கு மாற்றப்பட்டாலும், அங்கும் சென்னை ரசிகர்கள் படையெடுத்து விட்டனர். இதற்காக தனி ரயிலில் 1000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் சென்னையிலிருந்து புறப்பட்டு சென்றிருக்கின்றனர். இப்புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிஎஸ்கே அணி வீரர் ஹர்பஜன் சிங், ‘‘பார்த்தாயா எங்கள் அணியின் ரத கஜ துரக பதாதிகளை. அமெரிக்காலயே போய் நீங்க மேட்ச் நடத்தினாலும் விசில் போட தார தப்பட்டையோட எமை வாழ்த்த தேரேரும் என் தமிழினம்! உங்கள் அன்புக்கு நானடிமை! நீங்க வேற லெவல் மாஸ்யா! அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’’ என தமிழில் ட்வீட் செய்து, மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை