ஏறு­மு­கத்­தில் பட்­டாணி; இறங்­கு­மு­கத்­தில் கத்­த­ரிக்­காய்

தினமலர்  தினமலர்

சென்னை : காய்­கறி சந்­தை­யில் பட்­டாணி ஏறு­மு­கத்­தில் செல்ல, கத்­த­ரிக்­காய், காலி­பி­ள­வர் ஆகி­ய­வற்­றின் விலை குறைந்­துள்­ளது.

கோயம்­பேடு காய்­கறி சந்­தை­யில், சில வாரங்­க­ளுக்கு முன், 1 கிலோ பட்­டாணி, 30 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. தற்­போது, 70 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கிறது. கத்­த­ரிக்­காய் விலை, 1 கிலோ, 10 ரூபா­யாக குறைந்­து உள்­ளது. அதே போல், முட்­டைக்­கோ­சும், 7 ரூபா­யா­கி­யுள்­ளது. ஆந்­தி­ரா­வில் இருந்து வந்­துள்ள, காலி­பி­ள­வர், சென்னை புற­ந­கர் பகு­தி­களில், 1 பூ, 10 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது.

காய்­கறி சந்­தை­யில், 1 கிலோ காலி­பி­ள­வர், 25 ரூபா­யாக உள்­ளது. மொத்த விலை கடை­களில், 1 கிலோ தக்­காளி, 12 ரூபா­யாக உள்­ளது. சில்­லரை விற்­ப­னை­யில், 25 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது. முள்­ளங்கி, சுரைக்­காய், சாம்­பார் வெங்­கா­யம், 1 கிலோ, 10 ரூபா­யாக உள்­ளது. பீட்­ரூட், 8 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது.‘கோடை­யு­டன், அடுத்த மாதம் திரு­மண சீச­னும் துவங்­கும். அப்­போது காய்­கறி விலை அதி­க­ரிக்­கும்’ என, வியா­பா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

மூலக்கதை