கூட்டத்துக்குள் வெடித்த பட்டாசு! - சிதறி ஓடிய மக்கள்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கூட்டத்துக்குள் வெடித்த பட்டாசு!  சிதறி ஓடிய மக்கள்!!

நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற வானவேடிக்கை நிகழ்வு ஒன்று பெரும் பரபரப்பில் சென்று முடிந்துள்ளது. 
 
Haute-Savoie இன் Thonon-les-Bains பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணி அளவில் வானவேடிக்கைகள் இடம்பெற்றது. அதன்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. எதிர்பாரா விதமாக பட்டாசுகள் பற்றிக்கொண்டு, மக்கள் திரளுக்குள் சென்றது. பெரும் சத்தத்துடன் 100 மீட்டர்கள் தூரம் வரை பறந்து சென்று வெடித்துள்ளது. இதனால் கலவரம் அடைந்த மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஓடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
ரொக்கட் வகை பட்டாசுகள் சிறதி சென்று கூட்டத்துக்குள் பெரும் சத்தத்துடன் வெடித்ததாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. ஆனால் அதிஷ்ட்டவசமாக எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை எனவும், பரவிய கரும்புகை மண்டலத்தினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை