இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென்ஆப்ரிக்கா தொடருக்கு உதவியாக இருக்கும்: புஜாரா நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: தென்ஆப்ரிக்கா தொடருக்கு உதவியாக இருக்கும்: புஜாரா நம்பிக்கை

மும்பை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடருக்கு சிறப்பாக தயாராக உதவியாக இருக்கும் என இந்திய கிரிக்கெட் வீரர்  புஜாரா தெரிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரராக விளங்குபவர் புஜாரா.

30 வயதான புஜாரா இதுவரை இந்திய அணிக்காக 51 டெஸ்ட்டில் ஆடி 13 சதத்துடன் 4107 ரன் குவித்துள்ளார். சராசரி 52. 65.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான புஜாரா இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரன் குவிக்க தயாராகி வருகிறார்.
இதுபற்றி மும்பையில் அவர் கூறியதாவது:

எந்த ஒரு டெஸ்ட் தொடரும் முக்கியமானது தான். ஒவ்வொரு தொடரையும் புதிய தொடராகவே நினைத்து விளையாடி வருகிறேன்.

இலங்கை அணியை குறைத்து மதிப்பிட முடியாது. திறமையான வீரர்கள் பலர் அந்தஅணியில் உள்ளனர்.   ஜனவரியில் தொடங்கும் தென்ஆப்ரிக்கா தொடரும் கடும் சவால் நிறைந்தது.

அந்த தொடருக்கு முன்னோட்டமாக இலங்கை தொடர் அமைந்துள்ளது. இதை ஒரு நல்ல வாய்ப்பாக கருதுகிறேன்.

தென்ஆப்ரிக்காவுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக தனியாக பேட்டிங் பயிற்சி செய்வதில்லை.

ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் தனித்துவத்தை கொண்டுள்ளனர், வேறு  யாருடைய ஸ்டைலில் விளையாடுவதால் எந்தவித பயனும் இல்லை.


.

மூலக்கதை