வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப்
வித்தியாசமான கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில், அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் மட்டுமின்றி வில்லனாக நடிக்கும் படங்களும் வெற்றிபெற்று வருகிறது. மேலும், தற்போது வித்தியாசமான கெட்டப்புகளில் அவரது கவனம் திரும்பியிருக்கிறது. அந்த வகையில் ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
அந்த வேடத்தில் அவர் நடித்து வரும் போட்டோக்கள் இணைய தளங்களில் வைரலாகியது. அதையடுத்து இப்போது இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஜுங்கா. இந்த படத்தில் அவர் இன்னொரு மாறுபட்ட கெட்டப்பில் தோன்றுகிறார். அந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகி இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.