2-வது ஒரு நாள் போட்டி : 50 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

தினகரன்  தினகரன்

கொல்கத்தா : இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாஅபார வெற்றி பெற்றது. கொல்கத்தா : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 2-வது  ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி 92 ரன்களையும், ரஹானே 55 ரன்களையும் குவித்தனர் . ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் கௌல்டர்-நைல், கேன் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.253 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 202 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்மித் 55 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 39 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் சீன மென் குல்தீப் யாதவ்  அபாரமாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். வேட்,ஆஷ்டன் அகர்,பாட் கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். புவனேஷ்குமார் 2 விக்கெட்களையும் வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.இதனை தொடர்ந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மூலக்கதை