குறைந்த வட்டியில் கடன் வழங்கினால் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கும்

தினமலர்  தினமலர்
குறைந்த வட்டியில் கடன் வழங்கினால் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சி அதிகரிக்கும்

புது­டில்லி : ‘குறைந்த வட்­டி­யில் கடன் வழங்­கி­னால், நாட்­டின் ஏற்­று­மதி உய­ரும்’ என, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள், மத்­திய அர­சுக்கு ஆலோ­சனை வழங்கி உள்­ள­னர்.

டில்­லி­யில், மத்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் துறை அமைச்­சர் நிர்­மலா சீதா­ர­ாமன் தலை­மை­யில், வர்த்­தக வாரி­யத்­தின் கூட்­டம் நடை­பெற்­றது. அதில், ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக, ‘அன்­னிய வர்த்­தக கொள்கை – 2015 – 20’ல், மேற்­கொள்ள வேண்­டிய சீர்­தி­ருத்­தங்­கள் குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டது. பல்­வேறு தொழில் மற்­றும் ஏற்­று­மதி மேம்­பாட்டு கூட்­ட­மைப்­பு­களின் பிர­தி­நி­தி­கள், அரசு துறை­களின் உய­ர­தி­கா­ரி­கள், இக்­கூட்­டத்­தில் பங்­கேற்­ற­னர்.

கூடுதல் சலுகை:
இது குறித்து, மத்­திய வர்த்­தக துறை செய­லர் ரீடா தியோ­தியா கூறி­ய­தா­வது: ஏற்­று­ம­தியை மேம்­ப­டுத்­து­வது தொடர்­பாக, இக்­கூட்­டத்­தில் பல்­வேறு ஆலோ­ச­னை­கள் தெரி­விக்­கப்­பட்­டன. நாட்­டின் ஏற்­று­மதி, ஒன்­பது மாதங்­க­ளாக அதி­க­ரித்து உள்­ளது. இருந்த போதி­லும், அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு, ஏற்­று­மதி தொடர்ந்து வளர்ச்சி காண, கூடு­தல் சலு­கை­களை வழங்க வேண்­டும் என, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

எம்.இ.ஐ.எஸ்., என்ற திட்­டத்­தின் கீழ், ஏற்­று­மதி பொருட்­கள் மற்­றும் ஏற்­று­ம­தி­யா­கும் நாடு­களை பொறுத்து, 2, 3 மற்­றும் 5 சத­வீத வரிச்­ச­லுகை வழங்­கப்­ப­டு­கிறது. இதை உயர்த்த வேண்­டும் என, கோரிக்கை விடுக்­கப்­பட்டு உள்­ளது. ஏற்­று­ம­தி­யா­ளர்­களின் கடன் சுமையை குறைக்­கும் நோக்­கில், மத்­திய அரசு, 2015ல், 3 சத­வீத வட்டி மானிய திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. சிறிய மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள், கைவி­னைப் பொருட்­கள், வேளாண் மற்­றும் உண­வுப் பொருட்­கள் துறைக்கு, இந்த மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. இதை, மேலும் பல துறை­க­ளுக்கு விரி­வு­ப­டுத்த வேண்­டும் என, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கேட்­டுக் கொண்­ட­னர்.

பாதிப்பு இல்லை:
ஜூலை, 1ல் அம­லா­கும், ஜி.எஸ்.டி.,யில், அதி­க­ள­வில், நடை­முறை மூல­த­னம் முடங்­கும் அபா­யம் உள்­ள­தாக, ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கவலை தெரி­வித்­த­னர். ஜி.எஸ்.டி.,யில், ஏற்­று­ம­திக்கு பூஜ்­ஜிய வரி என்­ப­தால், எத்­த­கைய பாதிப்­பும் ஏற்­ப­டாது என, அவர்­க­ளுக்கு தெரி­விக்­கப்­பட்­டது. மத்­திய அரசு, புதிய ஏற்­று­மதி சந்­தை­களை கண்­ட­றி­வ­தற்கு தேவை­யான உத­வி­களை செய்ய வேண்­டும் என­வும், ஏற்­று­மதி நிறு­வன பிர­தி­நி­தி­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

இக்­கூட்­டத்­தில் தெரி­விக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­களின் அடிப்­ப­டை­யில், அன்­னிய வர்த்­தக கொள்கை மறு­சீ­ராய்வு செய்­யப்­படும். இதை­ய­டுத்து, மத்­திய அர­சின் ஒப்­பு­த­லு­டன், இம்­மாத இறு­திக்­குள், அன்­னிய வர்த்­தக கொள்­கை­யின் இடைக்­கால சீராய்வு அறிக்கை வெளி­யி­டப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

9 மாதங்களாக ஏறுமுகம்:
நாட்­டின் ஏற்­று­மதி வளர்ச்சி, மே மாதம், 8.32 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2,400 கோடி டால­ராக உயர்ந்­து உள்­ளது. ஒன்­பது மாதங்­க­ளாக, ஏற்­று­மதி வளர்ச்சி கண்டு வரு­கிறது. அதே சம­யம், அதி­க­ள­வில் தங்­கம் இறக்­கு­ம­தி­யா­ன­தால், நாட்­டின் வர்த்­த­கப் பற்­றாக்­குறை, 30 மாதங்­களில் இல்­லாத அள­விற்கு, மே மாதம், 1,384 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது.

மூலக்கதை