எப்.ஐ.பி.பி., அமைப்பு கலைப்பு; சி.ஐ.ஐ., கூட்டமைப்பு வரவேற்பு

தினமலர்  தினமலர்
எப்.ஐ.பி.பி., அமைப்பு கலைப்பு; சி.ஐ.ஐ., கூட்டமைப்பு வரவேற்பு

புதுடில்லி : எப்.ஐ.பி.பி., எனப்­படும், அன்­னிய முத­லீட்டு மேம்­பாட்டு வாரி­யத்தை கலைக்க, மத்­திய அமைச்­ச­ர­வைக் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இதை வர­வேற்று, சி.ஐ.ஐ., எனப்­படும், தேசிய தொழி­லக கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டுள்ள அறிக்கை: எப்.ஐ.பி.பி., அமைப்பு, இந்­தி­யா­வில், அரசு அனு­ம­தி­ உ­டன் அன்­னிய நேரடி முதலீடு மேற்­கொள்­ளும் திட்­டங்­க­ளுக்கு அனு­மதி வழங்கி வந்­தது. தற்­போது, பெரும்­பான்­மை­யான துறை­களில், அரசு ஒப்­பு­தல் இன்றி, அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது. பாது­காப்பு, சில்­லரை விற்­பனை உள்­ளிட்ட, 11 துறை­க­ளுக்கு மட்­டுமே, அரசு ஒப்­பு­தல் தேவைப்­ப­டு­கிறது.

அத­னால், எப்.ஐ.பி.பி., அமைப்பு தேவை­யில்லை. அதை கலைக்­கும் மத்­திய அர­சின் துணிச்­ச­லான நட­வ­டிக்கை பாராட்­டத்­தக்­கது. இதன் மூலம், அதி­க­ள­வில் அன்­னிய நேரடி முத­லீடு குவி­யும். இந்­தி­யா­வில் தொழில் துவங்­கு­வதை மேலும் சுல­ப­மாக்க, இந்த நட­வ­டிக்கை துணை புரி­யும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை