மக்ரோனின் திட்டங்களை எதிர்க்கும் இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர்

PARIS TAMIL  PARIS TAMIL
மக்ரோனின் திட்டங்களை எதிர்க்கும் இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர்

இல் து பிரான்ஸ் மாகாணத்தின் முதல்வர்  Valérie Pécresse  இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘மக்ரோனின் திட்டங்கள் நாட்டை பலப்படுத்த உதவாது’ என்று கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
‘மக்ரோனின் திட்டங்கள் எமக்கானவை அல்ல. அவற்றினால் எந்த நன்மையும் கிடைக்காது’ என்று Paris - Vincennes  இல் இன்று நடந்த கூட்டத்தில் பேசுகையில் Valérie Pécresse குறிப்பிட்டார். 
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை மக்ரோன் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற சமயத்தில், எலிசே மாளிகைக்கு  Valérie Pécresse  ம் அழைக்கப்பட்டிருந்தார். பார்வையாளர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்த அவரிடம் மக்ரோன் கைகுலுக்க வந்தபோது, சம்பிரதாயமாக புன்னகைத்தவாறே கை குலுக்கினார். ஏனையவர்கள் போன்று மக்ரோனை வாழ்த்தவோ, ஆதரவான கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவோ அவர் முனையவில்லை. 
 
இப்போது மக்ரோனின் திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கத் தொடங்கியுள்ளார். Valérie Pécresse நிக்கோலா சர்க்கோசியின் 'Republican'  கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தகக்து. 

மூலக்கதை