ஸ்கூட்டர் விற்பனையில் டி.வி.எஸ்., மோட்டார்ஸ் சாதனை

தினமலர்  தினமலர்
ஸ்கூட்டர் விற்பனையில் டி.வி.எஸ்., மோட்டார்ஸ் சாதனை

புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்­டார் நிறு­வ­னம், நடப்பு நிதி­யாண்­டில், ஏப்., – பிப்., வரை­யி­லான காலத்­தில், ஸ்கூட்­டர் விற்­ப­னை­யில், ஹீரோ மோட்­டார் கார்ப்., நிறு­வ­னத்தை பின்­னுக்கு தள்ளி, ‘நம்­பர் – 2’ இடத்தை பிடித்­துள்­ளது.
டி.வி.எஸ்., ஸ்கூட்­டர் விற்­பனை, 11 மாத காலத்­தில், 5.07 சத­வீ­தம் அதி­க­ரித்து, 7,43,838 ஆக உள்­ளது. இது, கடந்த நிதியாண்டில் இதே காலத்­தில், 7,07,884 ஆக இருந்­தது. இதன் மூலம், இந்­நி­று­வ­னம், ஸ்கூட்­டர் விற்­ப­னை­யில், இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது.அதே சம­யம், இரண்­டா­வது இடத்­தில் இருந்த, ஹீரோ மோட்டா கார்ப்., ஸ்கூட்­டர் விற்­பனை, இதே காலத்­தில், 1.64 சத­வீ­தம் குறைந்து, 7,31,967லிருந்து, 7,19,987 ஆக சரி­வ­டைந்து, மூன்­றா­வது இடத்­திற்கு தள்­ளப்­பட்டு உள்­ளது. நான்­கா­வது இடத்­தில், யமஹா; ஐந்­தா­வது இடத்­தில், சுசூகி ஆகிய நிறு­வ­னங்­கள் உள்ளன.
ஹோண்டா மோட்­டார் சைக்­கிள் அண்டு ஸ்கூட்­டர் நிறு­வ­னத்­தின், ஸ்கூட்­டர் விற்­பனை, 15.32 சத­வீ­தம் ஏற்­றம் கண்டு, 25,44,872லிருந்து, 29,34,794 ஆக உயர்ந்து, முத­லி­டத்­தில் உள்­ளது.

மூலக்கதை