உள்­நாட்டு விமான சேவை­யில் ஜப்­பானை விஞ்­சி­யது இந்­தியா

தினமலர்  தினமலர்
உள்­நாட்டு விமான சேவை­யில் ஜப்­பானை விஞ்­சி­யது இந்­தியா

புதுடில்லி : கடந்த, 2016ல், உள்நாட்டு விமான போக்குவரத்தில், பயணிகளை கையாள்வதில், இந்தியா, ஜப்பானை விஞ்சி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
இது குறித்து, ஆஸ்திரேலியாவின், ‘காபா’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஆண்டு, உள்நாட்டு விமான போக்குவரத்தில், இந்தியா, 10 கோடி பயணிகளை கையாண்டு, ஜப்பானை விஞ்சி, மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஜப்பான், உள்நாட்டு விமான போக்குவரத்தில், 9.70 கோடி பயணிகளை கையாண்டு, நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.அமெரிக்கா, சீனா ஆகியவை, முறையே, 71.90 கோடி மற்றும் 43.60 கோடி பயணிகளை கையாண்டு, முதல் இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன.
உள்நாடு மற்றும் வெளிநாடு விமான பயணிகளை கையாண்டதில், இந்தியாவும், பிரிட்டனும், நான்காவது இடத்தில் உள்ளன. ஜப்பான், 2016ல், மொத்தம், 14.10 கோடி விமான பயணிகளை கையாண்டு, மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா, 13.10 கோடி விமான பயணிகளை கையாண்டுள்ளது. அமெரிக்கா, சீனா ஆகியவை, முறையே, 81.50 கோடி மற்றும் 49 கோடி விமான பயணிகளை கையாண்டு, முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்தியா, திட்டமிட்டதற்கு முன்பாகவே, மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். எனினும், அமெரிக்கா, சீனாவை விஞ்ச நீண்ட ஆண்டுகள் ஆகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
3வது இடம்உள்நாட்டு விமான சேவையில், கடந்த இரு ஆண்டுகளாக, இந்தியா, 20 – 25 சதவீத வளர்ச்சியை கண்டு வருகிறது. அதனால், 2018 மார்ச்சில், ஒட்டுமொத்த விமான சேவையில், இந்தியா, மூன்றாவது இடத்தை பிடிக்கும்.-கபில் கவுல், ‘காபா’ இந்திய பிரிவின் தலைவர்

மூலக்கதை