இந்தவாரம் முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை!

PARIS TAMIL  PARIS TAMIL
இந்தவாரம் முழுவதும் அதிகரிக்கும் வெப்பநிலை!

பிரான்சில் இந்த வாரத்தின் வெப்பநிலை 23 செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய்யம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
இன்று திங்கட்கிழமை முதல் நாளை செவ்வாய்க்கிழமை வரை சராசரியான வெப்பநிலை நாடுமுழுவதும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் பிரான்சின் வடக்கு மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவும்... அதே போல் நண்பகலின் பின்னதாக மெல்லிய மழை பெய்யும் எனவும், ஆனாலும் காலையில் இருந்தே வெப்பம் அதிகளவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வரும் புதன்கிழமை 19 தொடக்கம் 22 செல்சியஸ் வரை வெப்பம் நீடிக்கும்.எனவும், வியாழக்கிழமை இந்த வாரத்தில் அதிக வெப்பம் நிலவும் நாளாகவும் இருக்கும். அன்றைய தினத்தில் 23 செல்சியஸ் வெப்பம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெப்பம் குறைவாகவும் நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய்யம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை