கிக் நடிகையுடன் போட்டிக்கு வரும் நாயகன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கிக் நடிகையுடன் போட்டிக்கு வரும் நாயகன்

கோலிவுட், டோலிவுட் நடிகர்களிடையே நட்பும், போட்டியும் வலுத்து வருகிறது. விஜய், அஜீத், விஷால், ஜெயம் ரவி நடித்த படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகின்றன.

அத்துடன் பல படங்கள் டப்பிங் செய்யப்பட்டு ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதேபோல் டோலிவுட் நடிகர்கள் மகேஷ்பாபு, ராம்சரண், என். டி. பாலகிருஷ்ணா படங்கள் தமிழ்நாட்டில் நேரடியாகவும், டப்பிங் செய்யப்பட்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

மகேஷ்பாபு நேரடியாக தமிழ் படத்தில் அறிமுகமாக உள்ளார்.

இப்படத்தை ஏ. ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.

தற்போது இந்த போட்டியில் இணைகிறார் மற்றொரு டோலிவுட் ஹீரோ சச்சின் ஜோஷி. உலகம் முழுவதும் ஓட்டல் நடத்தும் தொழில் அதிபராக இருந்தபோதும் நடிப்பின் மீதான மோகத்தால் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்தியிலும் 5 படங்கள் நடித்திருக்கிறார். தமிழில் சச்சின் ஜோஷி நடிக்கும் படத்துக்கு ‘யார் இவன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

பாலிவுட் கிக் ஹீரோயின் இஷா குப்தா கதாநாயகி. இவர்களுடன் பிரபு, கிஷோர், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

டி. சத்யா இயக்குகிறார். தமன் இசை.

கபடி விளையாட்டு பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதையுடன் திரில்லர் அம்சமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.


.

மூலக்கதை