சிறிலங்காவை கடுமையாக எச்சரிக்கும் இந்தியா!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவை கடுமையாக எச்சரிக்கும் இந்தியா!

 போர்க்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்கா அரசாங்கத்தை இந்தியா அரசாங்கம் எச்சரித்துள்ளது. 

 
தமிழர்களுக்கு காத்திரமான தீர்வினை வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். 
 
சிறிலங்கா அரசாங்கங்கள் தமிழர்களுக்கு எதிராக அடுக்கு முறைகளை தொடர்கின்ற போதும், அவர்களின் நலன்கள் குறித்து எந்தவொரு முன்னேற்றமான நடவடிக்கையும் செய்யவில்லை. 
 
ஐ.நா மனித உரிமை பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரையை கடுமையாக செயற்படுத்த வேண்டும்.
 
தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவும். அவர்களின் நலன்களை பாதுகாப்பதே இந்திய அரசாங்கத்தின் கடமையாகும். 
 
இதற்காக சிறிலங்காவுக்கு இரு வழிகளில் அழுத்தம் கொடுக்க முடியும். வலுக்கட்டாயமாக செயற்படுவது மற்றும் நட்பு நாடுகளுடன் இணைந்து ஆதரவாக செயற்படுவது அதன் மாற்று நடவடிக்கையாகும்.
 
ஐ.நா மீண்டும் இருவருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது. அந்த காலப்பகுதியில் அனைத்து பரிந்துரைகளை சிறிலங்கா நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 
 
இது குறித்த தகவலை ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.
 
எனினும் சிறிலங்காவின் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் இந்தியா இவ்வாறு விரல் நீட்டுவது பாரிய ஆபத்தான விடயமாகும். நல்லாட்சி அரசு இந்தியாவுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதா என்பது தொடர்பிலான விடயத்தை  உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என சிறிலங்காவின் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
சிறிலங்காவுக்கு ஆதரவாக இந்தியா செயற்படாத பட்சத்தில், அந்நாட்டின் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதக்க வேண்டும் என இலங்கை சிவில் அமைப்பு பிரதிநிதிகள் சிலர் கருத்து வெளியட்டுள்ளனர்.

மூலக்கதை