பொண்டியில் பெரும் தீவிபத்து!! பாரிய வெடிச்சத்தம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பொண்டியில் பெரும் தீவிபத்து!! பாரிய வெடிச்சத்தம்!!

சில மணி நேரங்களின் முன்னர் பொண்டியில் (Bondy-Seine-Saint-Denis) பெரும் தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. பொருட்களை அடுக்கி வைக்கும் பலகைச்சட்டங்கள் (palettes) பற்றியெறிந்தமையால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
 
அதிகாலை 01h00 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்தினால் பெரும் சுற்றுவட்டாரத்திற்கு வெடிக்கும் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளில் இருந்து சற்றுத் தள்ளியிருக்கும் இந்த வர்த்தகத் தொழிற்பேட்டைப் பகுதியில் தீப்பிடித்தமையால், தற்போதைய நிலவரப்படி யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இந்தத் தீயினால் இந்தத் தொழிற்பேட்டையில் உள்ள  கிட்டத்தட்ட 3.000 அ2  அளவான பகுதி தீக்கிரையாகி உள்ளதாகப் பரிசின் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
 
இதனால் ஏற்பட்ட பாரிய வெடிச் சத்தங்கள் சுற்றியுள்ள பல கிராமங்களிற்கு எதிரொலித்துள்ளது என, சமூகவலைத் தளங்கள் பதிவு செய்துள்ளன.
 
பாரதூக்கிக்காக உபயோகப்படுத்தப்பட்ட எரிவாயுத் தாங்கி வெடித்ததனாலேயே இந்தத் தீவிபத்து எற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மூலக்கதை