சிறிலங்காவில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து தரிப்பிடம்!

PARIS TAMIL  PARIS TAMIL
சிறிலங்காவில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து தரிப்பிடம்!

 சிறிலங்காவில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து தரிப்பிடம் கொழும்பு நகர மண்டப பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 
இந்த ஸ்மார்ட் பேருந்து தரிப்பிடத்தில் இலவச இணைப்பு வசதி, ஸ்மார்ட் விற்பனை இயந்திரம் என்பனவும் பொருத்தப்பட்டுள்ளன.
 
பணத்தை பயன்படுத்தாது இந்த ஸ்மார்ட் விற்பனை இயந்திரத்தில் இருந்து குளிர்பானங்கள், தண்ணீர் போத்தல்களை பெற்றுக்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
இயந்திரத்தில் இருக்கும் இலக்கத்திற்கு தமது தேவையானதை குறுஞ் செய்தி மூலம் தெரியப்படுத்த வேண்டும். மீண்டும் அனுப்பி வைக்கப்படும் இலக்கங்களை ஸ்மார்ட் விற்பனை இயந்திரத்தில் அழுத்துவதன் மூலம் தேவையான குளிர்பானத்தை பெற்றுக்கொள்ள முடியும்.
 
எந்தவொரு உபகரணத்தையும் பயன்படுத்தி இணையத்துடன் இணைய கூடிய Internet of Things என்ற தொழில்நுட்பத்தின் கீழ் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
 
தொலைத் தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த ஸ்மார்ட் பேருந்து தரிப்பிடத்தை திறந்து வைத்தார். 
 
இவ்வாறான ஸ்மார்ட் பேருந்து தரிப்பிடங்களை நாடு பூராகவும் அமைக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

மூலக்கதை