கொச்சின் ஷிப் யார்டு நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி திரட்ட முடிவு

தினமலர்  தினமலர்
கொச்சின் ஷிப் யார்டு நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி திரட்ட முடிவு

புதுடில்லி : கொச்­சின் ஷிப் யார்டு, பங்கு வெளி­யீட்­டின் மூலம், 1,500 கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்­துள்­ளது.பொதுத்­ து­றையைச் சேர்ந்த கொச்­சின் ஷிப் யார்டு நிறு­வ­னம், கேரள மாநி­லம், கொச்­சி­யில், துறை­முக வணி­கத்­தில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்­நி­று­வ­னம், துறை­முக விரி­வாக்க பணி­யில் ஈடு­பட இருப்­ப­து­டன், சர்­வ­தேச வணி­கத்­தில், பாது­காப்பு அம்­சங்­களை பலப்­ப­டுத்­த­வும் முடிவு செய்­துள்­ளது. இவற்­றுக்கு தேவைப்­படும் நிதியை, பங்குச் சந்­தை­யில், பங்­கு­களை வெளி­யிட்டு, 1,400 – 1,500 கோடி ரூபாய் அள­வுக்கு திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. இதற்­காக, பங்குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் அனு­மதி கேட்டு, வரைவு அறிக்கை தாக்­கல் செய்­துள்­ளது.கொச்­சின் ஷிப் யார்டு பங்கு வெளி­யீட்டு மேலாண்மை பணி­களை, எஸ்.பி.ஐ., கேப்பிட்­டல் மார்க்­கெட்ஸ், எடெல்­வைஸ் பைனான்­சி­யல் சர்­வீ­சஸ், ஜே.எம்., பைனான்­சி­யல் இன்ஸ்­டிடி­யூ­ஷ­னல் செக்­யூ­ரிட்­டிஸ் ஆகி­யவை மேற்­கொள்ள உள்ளன.

மூலக்கதை