ரூ.2 கோடிக்கு துணி சப்ளை காதி கமிஷனுக்கு சூப்பர் ‘ஆர்டர்’

தினமலர்  தினமலர்
ரூ.2 கோடிக்கு துணி சப்ளை காதி கமிஷனுக்கு சூப்பர் ‘ஆர்டர்’

புதுடில்லி : ரேமண்ட் நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து, இரண்டு கோடி ரூபாய் மதிப்­புள்ள, காதி துணி­களை சப்ளை செய்­வ­தற்­கான ஆர்­டரை, கதர் மற்­றும் கிராம தொழில்­கள் ஆணை­ய­மான – கே.வி.ஐ.சி., பெற்­றுள்­ளது.இது குறித்து, கே.வி.ஐ.சி., தலை­வர், வி.கே.சக்­சேனா கூறி­ய­தா­வது:ரேமண்ட் நிறு­வ­னத்­திற்கு, 98 ஆயி­ரம் மீட்­டர், காதி துணி சப்ளை செய்­வ­தற்­கான ஆர்­டரை பெற்று உள்­ளோம். இதன் மதிப்பு, இரண்டு கோடி ரூபாய். இதுவே, கே.வி.ஐ.சி., இது­வரை பெற்ற அதி­க­பட்ச மதிப்­புள்ள ஆர்­டர் ஆகும்.கைவி­னை­ஞர்­களின் நல­னையே, கே.வி.ஐ.சி., இலக்­காக கொண்டு செயல்­ப­டு­கிறது. அத­னால், இது போன்ற பிரத்­யேக ஆர்­டர்­கள் வாயி­லாக கிடைக்­கும் லாபத்­தில், 5 சத­வீ­தம், சம்­பந்­தப்­பட்ட கைவி­னை­ஞர்­கள் பிரி­வுக்கு வழங்­கப்­படும்.கார்ப்­ப­ரேட் மற்­றும் தனி­யார் துறை­யில், காதி தயா­ரிப்­பு­கள் நுழை­வ­தன் மூலம், கே.வி.ஐ.சி., உள்ள, கைவி­னை­ஞர்­கள் நிலை­யான வேலை மற்­றும் வாழ்­வா­தா­ரத்தை பெற முடி­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.கடந்த ஆண்டு டிசம்­ப­ரில், ரேமண்ட் நிறு­வ­னத்­து­டன், கே.வி.ஐ.சி., ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை