சிவப்பு விளக்கு பகுதி கேட்டு படம் எடுத்தது ஏன்?இயக்குனர் விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிவப்பு விளக்கு பகுதி கேட்டு படம் எடுத்தது ஏன்?இயக்குனர் விளக்கம்

மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் படங்களை இயக்கியவர் யுரேகா. அடுத்து காட்டு பய சார் இந்த காளி படம் இயக்குகிறார்.

இதுபற்றி அவர் கூறியது: சென்னையில் சிவப்பு விளக்கு பகுதி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் இயக்கினேன். விபசாரத்தை ஊக்குவிப்பதற்காக இந்த படத்தை எடுத்தீர்களா என்கிறார்கள்.

விபசாரத்தை ஒழிப்பதற்காகவே இதை எடுத்தேன். வெளி மாநிலம் வெளிநாடுகளிலிருந்து பலர் வேலைக்கு வந்து செட்டிலாகி உள்ளனர்.

அவர்களில் சிலர் காமத்துக்கு அடிமையாகி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் பல நடந்துள்ளன.

காமத்தை கட்டுப்படுத்த முடியாமல் இதுபோன்ற தவறுகள் நடப்தை சிவப்பு விளக்கு பகுதி தடுக்கும், பாலியல் பலாத்கார பிரச்னைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பது என் கருத்து. அடுத்து காட்டு பய சார் இந்த காளி படம் இயக்குகிறேன்.

இது கமர்ஷியல் அம்சத்துடன் கூடிய சைகோ கதை. ஜெய்வந்த் ஹீரோ.

அய்ரா அகர்வால் ஹீரோயின்.

இயக்குனர் பொறுப்புடன் எழுத்தாளர், சமூக சேவை உள்ளிட்டவற்றில் ஆர்வம் உள்ள எனக்கு நைட் ஆப் மால்டா ஜெருசலம் அமைப்பு சார்பில் செவாலியர் விருது அளிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை