சிம்புவை இயக்க ஐஸ்வர்யா விருப்பம்: தனுஷ் சம்மதிப்பாரா?

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிம்புவை இயக்க ஐஸ்வர்யா விருப்பம்: தனுஷ் சம்மதிப்பாரா?

ரஜினி மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை மணந்துகொண்டு இல்லறத்தில் செட்டிலானாலும் இயக்குனர் ஆகும் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ‘3’ படம் இயக்கினார். இதில் தனுஷ் ஹீரோவாக நடித்தார்.

அடுத்து கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை படம் இயக்கினார். தற்போது தமிழ், ஆங்கிலத்தில் ‘மாரியப்பன்’ படம் இயக்குகிறார்.

இது பாராலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற விளையாட்டு வீரரின் வாழ்க்கை சரித்திர படம். தனுஷ், சிம்பு நண்பர்களாக பழகினாலும் சினிமாவை பொறுத்தவரையில் போட்டியாளர் களாகவே உள்ளனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் தனது விருப்பத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அது பலரையும் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.

‘சிம்புவுக்காக ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறேன். அதை அவரிடம் சொல்வதற்காக நேரம் ஒதுக்க கேட்டிருக்கிறேன்.

கதை பிடித்திருந்தால் அவரை வைத்து படம் இயக்குவேன்’ என்றார்.

சிம்பு நடிக்கும் படத்தை ஐஸ்வர்யா இயக்குவதற்கு தனுஷ் சம்மதிப்பாரா என்று கோலிவுட்டில் கேள்வி எழுந்துள்ளது.

.

மூலக்கதை