பிரெஞ்சுக் குடிமகன் பயங்கரவாதிகளால் கடத்தல் - அரசின் அதிரடி நடவடிக்கை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரெஞ்சுக் குடிமகன் பயங்கரவாதிகளால் கடத்தல்  அரசின் அதிரடி நடவடிக்கை!!

நேற்று வியாழக்கிழமை, சாட் நாட்டில் (Tchad) வைத்துப் பயங்கரவாதிகளால் பிரெஞ்சுக் குடிமக் ஒரவர், கடத்தப்பட்டுள்ளார். சுரங்கத் தொழிற்சாலை நிறுவனத்தின் பணியாளரான இவர், சாட்டின் Abéchéபகுதியிலிருந்து 200 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்துக் கடத்தப்பட்டுள்ளார். இவரின் கடத்தலிற்கான காரணம் தெளிவின்மையானதாகவே உள்ளது. பிரெஞ்சு அரசாங்கமும் இவரின் கடத்தல் தொடர்பான விடயங்களை மிகவும் இரகசியமாகவே பேணி வருகின்றது.
 
அறுபதுகளின் வயதுகளில் உள்ள இவர், தனது நிறுவனத்தின் பணியாளர்களிற்கான ஊதியப் பணத்தினை எடுத்து வரும்போதே கடத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உந்துருளியில் வந்த, முகமூடி அணிந்த நால்வர், இவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.
 
 
'சாட்டில் வைத்துப் பிரெஞ்சுக் குடிமகன் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்பதற்கான சகல முயற்சிகளும் உடனடியாக எடுக்கப்படும்' என்று பிரோன்சுவா ஒல்லோந்தும், வெளிவிவகார அமைச்சகமும் தெரிவித்துள்ளது. இவர்கள் குறிப்பிடக்கூடிய மேலதிகத் தகவல்கள் எதனையும் வழங்கவில்லை.
 
 
இந்தக் கடத்தலை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக, சாட்டின் அரசாங்கத்தின் சார்பில் அதன் பேச்சாளர் Madeleine Alingue தெரிவித்துள்ளார்.
 
சாட்டின் N'Djamena வில் பிரான்சின் சிறப்புப் பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப்படையினர் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை