இந்திய கிரிக்கெட் வாரியம் மீது அனுராக் தாக்கூர் பாய்ச்சல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய கிரிக்கெட் வாரியம் மீது அனுராக் தாக்கூர் பாய்ச்சல்

மும்பை: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவடையும் தருவாயில் உள்ளது. முன்னதாக இந்த தொடரில், டிஆர்எஸ் அப்பீல் செய்வதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஏதாவது சிக்னல் கிடைக்கிறதா? என தனது அணி டிரெஸ்ஸிங் ரூமை பார்த்தது, விராட் கோஹ்லியின் தோள்பட்டை காயத்தை களத்தில் மேக்ஸ்வெல் கிண்டல் செய்தது என ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன.

ஆஸ்திரேலிய ஊடகங்களும் தொடக்கம் முதலே விராட் கோஹ்லியை கடுமையாக விமர்சனம் செய்தன. சர்ச்சைகளை உருவாக்குவதில் விளையாட்டு துறையின் டொனால்ட் டிரம்ப்பாக (அமெரிக்க அதிபர்) விராட் கோஹ்லி இருக்கிறார் எனவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதற்கு எல்லாம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தவறும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் (சிஏ) அகங்காரமுமே காரணம் என முன்னாள் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் டிவிட்டரில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மிகவும் சிறந்த வீரரான விராட் கோஹ்லிக்கு அவமரியாதை செய்யும் வகையில் ஆஸ்திரேலிய ஊடகங்களும், சிஏ நிர்வாகிகளும் பேசியுள்ளனர்.

இந்த விவகாரங்களில் இந்திய அணி மற்றும் வீரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அவர்களின் பின்னால் பிசிசிஐ நிற்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

.

மூலக்கதை