பிரித்தானியாவிற்காக அணைந்த ஈபிள் கோபுரம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானியாவிற்காக அணைந்த ஈபிள் கோபுரம்!!

"லண்டனின் பயங்கரவாதத் தாக்குதல்களில் இன்று வீழந்து பட்டவர்களிற்காக எனது விளக்குகளை நடுநிசியில் அணைத்துக் கொள்கின்றேன்" என, ஈபிள் கோபுரத்தின் டுவிட்டர் தளம் நேற்று இரவு அறிவித்திருந்தது. இதன்படி ஈபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் நேற்று நள்ளிரவிலிருந்து அணைக்கப்பட்டு இருளாகியது.
 
இன்றைய லண்டன் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் தொகையானது, மேலும் அதிகரித்தச் செல்கின்றது. இறுதிக்கட்ட நிலவரங்களின்படி தாக்குதலதலாளி உட்பட 5 பேர் கொல்லப்பட்டு, 40 பேர் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
தாக்குதலின் போது பாராளுமன்றத்தினுள் இருந்த பிரதமர் லிண்டா மே, பாதுகாப்பான இரகசியக் கதவுகளினால், பிரத்தியேகப் படைகளினால் வெளியேற்றப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளார். 
 

மூலக்கதை