துளி துளியாய்.......

தினகரன்  தினகரன்

* ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லி கிரேட்டர் நொய்டாவில் நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. டாசில் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவரில் 220 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஷபிகுல்லா 42, முகமது நபி, தவ்லத் ஸத்ரன் தலா 41, கேப்டன் ஸ்டானிக்சாய் 35, ஹஸ்மதுல்லா 23 ரன் எடுத்தனர். கெவின் ஓ பிரையன் 4, முல்டர் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய அயர்லாந்து 46.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 224 ரன் எடுத்து வென்றது. வில்சன் 41, ஜாய்ஸ் 24, ஸ்டர்லிங் 28, பல்பர்னி 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அதிரடியாக விளையாடிய கெவின் ஓ பிரையன் ஆட்டமிழக்காமல் 72 ரன் விளாசினார். இரு அணிகளும் 2-2 என சமநில வகிக்க, 5வது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது.* இந்தியாவில் நடைபெற உள்ள பிபா யு-17 உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரை பிரபலப்படுத்தும் வகையில், முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலர் இந்தியா வர உள்ளனர்.* ஸ்பெயினில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்மின்டன் தொடரில் இந்திய வீரர் சுகந்த் கடம் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.* விசாகப்பட்டிணத்தில் 25ம் தேதி தொடங்கும் தியோதர் டிராபி ஒருநாள் போட்டித் தொடரில் விளையாட உள்ள தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஷங்கர் தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அணி: விஜய் ஷங்கர் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கங்கா தர் ராஜு, இந்திரஜித், சூரியபிரகாஷ், கவுஷிக் காந்தி, ஜெகதீசன், ஜே.கவுஷிக், எம்.முகமது, அந்தோனி தாஸ், ஆர்.ரோகித், ரகில் ஷா, முருகன் அஷ்வின், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர்.

மூலக்கதை