அஸ்வின்-ஜடேஜா இடையே போட்டி? பிஷன் சிங் பேடி பதில்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அஸ்வின்ஜடேஜா இடையே போட்டி? பிஷன் சிங் பேடி பதில்

அம்ரிஸ்டர்: இந்திய அணிக்கு எதிராக புனேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. உடனடியாக இதில் இருந்து மீண்ட இந்திய அணி, பெங்களூருவில் நடந்த 2வது டெஸ்டில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது.

ராஞ்சியில் நடந்த 3வது டெஸ்ட் ‘டிராவில்’ முடிவடைந்தது. முதல் டெஸ்ட் தோல்வியில் இருந்து இந்தியா மீண்டு வர ரவீந்திர ஜடேஜா மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

2,3வது போட்டிகளில் மட்டும் அவர் மொத்தமாக 16 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் பிஷன் சிங் பேடி கூறுகையில், ‘ரவீந்திர ஜடேஜா மகத்தான வீரராக வளர்ந்து வருகிறார்.

மிகவும் சிறப்பாக பந்து வீசும் அவர், பேட் மூலமாகவும் அணிக்கு பங்களிப்பு அளிப்பது அற்புதமானது.

பந்து வீச்சு தரத்தில் அவர் ரவிச்சந்திரன் அஸ்வினை நெருங்கி வருகிறார்.

இந்திய அணிக்காக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவருமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். அத்துடன் ஒருவருக்கொருவர் நன்றாக ஆதரவும் அளித்து கொள்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு இடையே போட்டி எதுவும் இல்லை’ என்றார்.
புதிய பெயர் சூட்டினார் கோஹ்லி இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 25ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தர்மசாலா புறப்பட்டு சென்றுள்ளனர்.

முன்னதாக ரவீந்திர ஜடேஜாவுடன் பயணிக்கும் படத்தை இந்திய கேப்டன் கோஹ்லி டிவிட்டரில் பதிவிட்டார். அத்துடன், ‘கடைசி டெஸ்ட் போட்டிக்காக பவுலிங் மெஷினுடன் தர்மசாலா செல்கிறேன்’ என கூறியுள்ளார்.

ஜடேஜாவுக்கு ‘பவுலிங் மெஷின்’ என்ற புதிய பெயரை கோஹ்லி சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை