உலகின் விலைமதிப்பு கூடிய நகரங்கள்! - பரிஸ் ஏழாவது இடத்தில்!!

PARIS TAMIL  PARIS TAMIL
உலகின் விலைமதிப்பு கூடிய நகரங்கள்!  பரிஸ் ஏழாவது இடத்தில்!!

உலகின் விலைமதிப்பு கூடிய (most expensive) நகரங்கள் பட்டியலில் பரிஸ் நகரம் ஏழாவது இடத்தில் உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டில் 3 ஆம் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
மிக சமீபத்தில் எடுக்கப்பட்ட பொருளாதார தரவரிசை பட்டியலில், உலகின் மிக விலைமதிப்பு கூடிய 10 நகரங்கள் தெரிவு செய்யப்பட்டது. வீடுகளுக்கான வாடகை, அத்தியாவசிய பொருட்களின் விலை, தண்ணீர், மின்சாரம், தொலைத்தொடர்பு சேவை, எரிவாயு போன்ற கட்டணங்கள், போக்குவரத்து, வரி போன்றவற்றை கணக்கிட்டு, வாழ்வாதாரத்துக்கான செலவுகள் அதிகம் கொண்ட நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 
 
இந்த தரவரிசையில் முதலாவது இடத்தில் சிங்கப்பூர் நகரமும், இரண்டாவது இடத்தில் ஹாங்காங் நகரமும், மூன்றாவது இடத்தில் சூரிச் நகரமும் உள்ளது. அதை தொடர்ந்து ஏழாவது இடத்தில் பரிஸ் உள்ளது. பரிசுடன் சுவிட்சர்லாந்தின் Genève நகரமும் ஏழாவது இடத்தில் உள்ளது. இதனால் முதல் 10 இடங்களுக்குள் சுவிட்சர்லாந்தின் இரண்டு நகரங்கள் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பானின் ஒசாக்கா நகரம் 5 வது இடத்திலும், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் 10 அது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை