கிரிக்கெட் விளையாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள்!

PARIS TAMIL  PARIS TAMIL
கிரிக்கெட் விளையாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள்!

கிரிக்கெட் விளையாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
கடந்த டிசம்பர் மாதம், மும்பையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு, சில புதிய சட்டங்களை எம்சிசி கிரிக்கெட் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
 
அதில், உயரம் குறைந்த துடுப்புகளைப் பயன்படுத்த முடியாது என்பது முக்கிய விதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது.
 
கிரிக்கெட் துடுப்புகளின் அகலம் 108 மிமீ, ஆழம் 67 மிமீ மற்றும் முனைகள் 40 மிமீ-க்கு மேல் இருக்க கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேலும், ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கவும், தேவைப்பட்டால் அவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றவும், எதிரணிக்கு கூடுதல் ஓட்டங்களை வழங்கவும் நடுவர்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும், ஆண்-பெண் வீர, வீராங்களைகளைச் சுட்டும் வகையிலான பதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்த விதிமுறைகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.

மூலக்கதை